டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சுடன் டென்னிஸ் விளையாடும் ஸ்மித்

டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சும், கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித்தும் அவுஸ்திரேலிய ஓபனுக்கு முன்னதாக டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.

இன்று தொடங்கி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி.

இதற்காக நட்பு ரீதியாக டென்னிஸ் உலகில் நட்சத்திர வீரராக இருக்கும் ஜோகோவிச் உடன் மெல்போர்ன் நகரில் நடந்த போட்டியில் ஸ்மித் டென்னிஸ் ஆடினார்.

இதில் ஜோகோவிச்சின் சர்வீஸை எதிர்கொண்ட ஸ்மித் திறமையாக அடித்து ஆடுவார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆர்ப்பரித்ததுடன், ஆச்சரியமடைந்த ஜோகோவிச் தலைவணங்கி பாராட்டினார்.

அதேபோல ஜோகோவிச் கிரிக்கெட் விளையாடினார். ஆனால் அவரால் பந்தினை அடிக்க முடியவில்லை. இந்த காணொளிகள் சமூக வலைதளங்களில் தற்சமயம் வைரலாகி வருகின்றன.

24 கிராண்ஸ்லாம் வென்றுள்ள முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 25 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளார்.

கடந்த ஆண்டு, ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை தோற்கடித்தார், பின்னர் பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ஓபன் பட்டங்களையும் தனதாக்கினார்.

Recommended For You

About the Author: admin