காலாராம் கோவிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி

மகாராஷ்டிர – நாசிக்கில் உள்ள காலாராம் கோவிலில் இன்று இடம்பெற்ற ‘ஸ்வச்சதா அபியான்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கோவிலில் தூய்மைப் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்த காணொளிகள் சமூக ஊடகங்கள் வெளியாகியுள்ளன.

இந்த காணொளியில், பிரதமர் மோடி நாசிக்கில் உள்ள காலாராம் கோவிலில் உள்ள மரத்தின் அருகே உள்ள பகுதியை வாளி மற்றும் துடைப்பான் கொண்டு சுத்தம் செய்வதைக் காண முடிகின்றது.

அயோத்தியில் இராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தூய்மை செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

காலாராம் கோயிலில் தூய்மைப் பணியை மேற்கொண்ட பிரதமர் மோடி, நாசிக்கில் உள்ள ராம்குண்டில் பிரார்த்தனை வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

தூய்மைப் பணியில் பிரதமர் மோடி பங்கேற்பது இது முதல் முறையல்ல. முன்னதாக, குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தூய்மைப் பணிகளில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin