பாராளுமனறத்தில் இரண்டாம் வாசிப்புக்காக அரசாங்கம் சமர்ப்பித்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளது.
சட்டத்தரணி சுனில் வட்டகல தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டமூலத்துக்கு பாராளுமன்றத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்த இரண்டு வாரகாலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இன்று தேசிய மக்கள் சக்தி இதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தது.