“பாராளுமன்ற உறுப்பினர் தனக்கு ஒத்துழைப்பு வழங்கினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக அவருடைய புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஆதரவளித்தால் அவர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி கூறியதாக குறித்த பதிவு தொடர்பில் பலர் தமது எதிர்ப்பை தெரிவித்தும் வருகின்றனர்.
இலங்கையின் இணையத்தளம் ஒன்றை மேற்கோள்காட்டி இந்த செய்தி பகிரப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் FactSeeker இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து இந்த செய்தி பொய் என்பதை உறுதிபடுத்தியுள்ளது.
இது தொடர்பில், ஜனாதிபதி ஊடகப் பிரிவிடமும் FactSeeker மேற்கொண்ட விசாரணையில், ஜனாதிபதி அவ்வாறான கருத்தை வெளியிடவில்லை எனவும், இது பொய்யான அறிக்கை எனவும் உறுதிப்படுத்தப்பட்டது