சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தவறான பொருளாதார கொள்கைகளுக்கு பின்பற்ற செய்யும் தவறான செயற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஈடுபட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
”தமதும் சஜித் பிரேமதாசவின் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றே. ரணில் மற்றும் சஜித்தின் பொருளாதார கொள்கைகளுக்கு இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. அந்த பொருளாதாரக் கொள்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்தாமல் பெரும் தவறை சஜித் பிரேமதாச செய்து வருகிறார்.
ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான பொருளாதாரக் கொள்கைகளில் பாரிய வேறுபாடுகள் உள்ளன. எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அரசில் தனக்கு நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக நினைத்து சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.” என்றார்.