சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முதல் சூரியப் பயணமான ஆதித்யா எல்1 அதன் இலக்கில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் அறிவித்துள்ளார்.
ஆதித்யா-எல்1 அதன் எல்1 (Lagrangian point1) புள்ளியை இன்று மாலை 4 மணியளவில் அடைந்துள்ளதாகவும், விண்கலம் எந்த கிரகணமும் இல்லாமல் சூரியனைப் பார்க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.