ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ள ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், இன்று ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரரான டேவிட் வார்னர் அந்த அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 161 ஒருநாள் போட்டிகள், 111 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 99 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அது தவிர்த்து ஐபிஎல் தொடரிலும் கடந்த 2009ம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் 176 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

மூன்று வகையான சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் சதம் அடித்துள்ள அவர் மிகச் சிறப்பான தொடக்க வீரராக இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் 37 வயதாகும் டேவிட் வார்னர் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போகிறேன் என்று அறிவித்துள்ளார்.

மேலும், சிட்னியில் தனது சொந்த மண்ணில் நாளை மறுதினம் 3ம் திகதி தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டியோடு டேவிட் வார்னர் விடை பெறுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin