காயங்களை குணப்படுத்தும் மினி ரோபோக்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் காயங்களைத் தானாகவே குணப்படுத்தும் ஒரு வேற லெவல் மினி ரோபோக்களை உருவாக்கியுள்ளனர். இது பலரையும் வியக்க வைப்பதாக இருக்கிறது.

மருத்துவத் துறையில் தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாகத் தானாகக் காயங்களைக் குணப்படுத்தும் மினி ரோபோக்கள் குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்கிடையே மிகப் பெரிய திருப்புமுனையாக, ஆய்வாளர்கள் மனித செல்களை பயன்படுத்தி சிறிய உயிருள்ள ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த சிறு ரோபோக்களால் நகர முடியும். இதன் மூலம் சேதமடைந்த திசுக்கள் மற்றும் காயங்களைக் கூட விரைவில் குணப்படுத்தும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய ஒரு குழு இதை உருவாக்கியுள்ளனர். இதை அவர்கள் ஆந்த்ரோபோட்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த ஆந்த்ரோபோட்கள் மனித முடி சைஸில் இருக்கும். அவை தங்களை தாங்களே அசெம்பிள் செய்து கொள்ளும் திறனையும் கொண்டுள்ளது. காயங்களைக் குணப்படுத்தவும், நோய்க்கான சிகிச்சை அளிக்கவும் இந்த ஆந்த்ரோபோட்கள் பயன்படும். இது ஆய்வின் தொடக்கம் தான் என்றும் வரும் காலத்தில் இத்துறையில் பல மாற்றங்கள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆந்த்ரோபோட்கள்:

இப்போது அதில் இருந்து அடுத்த அப்கிரேட் ஆக ஆய்வாளர்கள் இந்த ஆந்த்ரோபோட்கள் என்ற வகை மினி ரோபோக்களை உருவாக்கியுள்ளனர். இதற்காக வெவ்வேறு பாலினங்கள் மற்றும் வயதைச் சேர்ந்த நபர்களிடம் இருந்து மூச்சு குழாயிலிருந்து மனித உயிரணுக்களை ஆய்வாளர்கள் எடுத்துள்ளனர். கொரோனா மற்றும் நுரையீரல் நோய் தொடர்பான பணிகளின் காரணமாக இப்படி மூச்சு குழாயிலிருந்து செற்களைச் சேகரிப்பது ஆய்வாளர்களுக்கு எளிதாக இருக்கிறது.

பலன்கள்:

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், “இந்த மினி ரோபோக்கள் நிச்சயம் நாம் வாழும் முறையை மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. இது ஏதோ ஓரிரு நாட்களில் நடப்பது இல்லை. பல ஆண்டுகள் ஆய்வின் முடிவு தான் இது. நாங்கள் உருவாக்கிய இந்த ஆந்த்ரோபோட்களை கொண்டு நிச்சயம் மனித உடல்களில் ஏற்படும் காயங்களுக்குக் கூட சிகிச்சை அளிக்க முடியும். இது உடனே ஆறு மாதத்தில் நடந்துவிடும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், நிச்சயம் இது சாத்தியமே” என்றார்.

Recommended For You

About the Author: admin