52 ஆண்டுகளுக்குப் பின் அரியணையை விட்டுக்கொடுக்கும் டென்மார்க் ராணி

ஐரோப்பாவில் நீண்ட காலம் அரசராக இருந்த டென்மார்க்கின் ராணி இரண்டாம் மார்கிரேத், 52 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனவரி 14ஆம் திகதி அரியணையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

1972ஆம் ஆண்டு அரியணை ஏறிய 83 வயதான ராணி, தனது பாரம்பரிய புத்தாண்டு உரையின் போது நேரடி தொலைக்காட்சியில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கடந்த ஆண்டு பெப்ரவரி வெற்றிகரமாக முதுகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், “அறுவைசிகிச்சை இயற்கையாகவே எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டியது எனவும் அடுத்த தலைமுறைக்கு பொறுப்பை விட்டுச்செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனவும் கூறியுள்ளார்.

“இதுதான் சரியான நேரம் என்று நான் முடிவு செய்துள்ளேன். பதவியேற்ற 52 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனவரி 14ஆம் டென்மார்க் ராணி பதவியில் இருந்து விலகுவேன்” என்று அவர் கூறினார்.

“தனது அரியணையை என் மகன் பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக்கிடம் விட்டுச்செல்கின்றேன்” என்றும் அவர் கூறினார்.

பிரித்தானியாவின் ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 2022இல் உயிரிழந்ததை தொடர்ந்து, டென்மார்க் ராணி ஐரோப்பாவில் நீண்ட காலம் பதவியில் இருந்த ஆட்சியாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

டென்மார்க்கில், முறையான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் மற்றும் அதன் அரசாங்கத்திடம் உள்ளது.

மன்னர் அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருப்பார், மாநிலப் பயணங்கள் முதல் தேசிய தினக் கொண்டாட்டங்கள் வரையிலான பாரம்பரிய கடமைகளுடன் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin