சென்னையில் திருமண ஆசைக்காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நடிகர் விஜய் அலுவலக கணக்காளர் மீது பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
26 வயது இளம்பெண் கொடுத்த புகாரில், சமூக வலைதளம் வாயிலாக, நடிகர் விஜயின் கணக்காளர் எனவும், நடிகர் விஜயுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்த, ராஜேஷ் (32) என்பவர், என் தோழி வாயிலாக பழக்கமானார்.
தனக்கு திருமணமானதை மறைத்த ராஜேஷ், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். மேலும், பல்வேறு காரணங்களை கூறி, 10 லட்சம் ரூபாய் வரை என்னிடம் வாங்கினார்.
ராஜேஷ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார்.
இது குறித்து ராஜேஷ் கூறும் போது, “நான், சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் அலுவலகத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறேன். துணை நடிகை ஒருவர் வாயிலாக, அந்த பெண் அறிமுகமானார்.
நான் திருமணம் ஆனவன் என சொன்ன போதிலும் பின்னரும் எனக்கு தவறான மெசேஜ்களை அனுப்பினார்.
அந்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. உண்மையில் அந்த பெண் தான் எனக்கு பாலியல் தொல்லை தந்தார். அது குறித்து நானும் புகார் அளித்துள்ளேன்” என்றார்.