இந்திய டெஸ்ட் தென்னாப்பிரிக்கா ஆதிக்கம்

இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது கலத்தடுப்பில் ஈடுபட்டிருந்த தென்னாப்பிரிக்கா அணியின் தலைவர் தெம்பா பவுமா காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதனையடுத்து டீன் எல்கர் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இடம்பெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுகின்றது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை பெற்றிருந்தது.

தென்னாப்பிரிக்கா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறிவருகின்றது. முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

போட்டியின் மார்கோ ஜான்சன் வீசிய 20வது ஓவரின் நான்காவது பந்தை எக்ஸ்ட்ரா கவர் மூலம் விராட் கோலி அடித்தாடியிருந்தார்.

இதன் போது கலத்தடுப்பில் ஈடுபட்டிருந்த பவுமா பந்தை சிறப்பாக தடுத்த போதிலும், அவருக்கு தொடை எலும்பு சேதமடைந்தது காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் மைதானத்தை விட்டு வெளியேறிருந்தார். இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணியின் தலைவராக யார் செயற்படுவார் என்ற கேள்வியெழுந்தது.

முதலில், ஐடன் மார்க்ரம் தலைவராக இருப்பார் என்று கூறப்பட்டது.

இந்தத் தொடரின் துணை தலைவராக டீன் எல்கர் நியமிக்கப்பட்டார் என்பதும், பவுமா இல்லாத நிலையில் அவர்தான் பொறுப்பேற்பார் என்பதும் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

Recommended For You

About the Author: admin