இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் – தாய்லாந்துக்கு விசா இன்றி பயணிக்க புதிய ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் தாய்லாந்து இடையே சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்களிப்பு வழங்குவதற்கான ஒப்பந்தத்திற்கு தாய்லாந்து அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த நவம்பர் 17ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக தாய்லாந்து அரசாங்கத்தின் பிரதி பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளினதும் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி ஒரு பயணத்தில் அதிகபட்சமாக 30 நாட்கள் வரை தங்க முடியும். மேலும், 180 நாட்களுக்குள் மொத்தமாக 90 நாட்கள் வரை தங்குவதற்கும் அனுமதி வழங்கப்படவுள்ளது.

எனினும், 30 நாட்களுக்கு மேலாகத் தங்குதல், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவற்றுக்கு உரிய விசா அவசியமாகும்.

இரு நாடுகளும் தமது உள்நாட்டு நடைமுறைகளை நிறைவு செய்துள்ளதாக அறிவித்த பின்னர் 60 நாட்களில் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதன் மூலம் இலங்கை – தாய்லாந்து இடையிலான சுற்றுலா, கலாசார மற்றும் மதப் பயணங்கள் மேலும் இலகுவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin