அஜித் – விஜய் திரைப்படங்களை நிராகரித்த முன்னணி நடிகை

பிரேமம் படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார் சாய் பல்லவி, நடிப்பில் தனக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கையை கொண்டவர்.

அதனால் தனக்கு வந்த பல படங்களை நிராகரித்துள்ளார்.

அந்த வகையில் அஜித்குமார் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த லியோ ஆகிய படங்களை சாய் பல்லவி நிராகரித்தது தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு சாய் பல்லவிக்கே முதலில் வந்தது ஆனால் கதைகளை கேட்டதும், சாய் பல்லவி தனது கதாபாத்திரம் முக்கியமற்றது என்று கருதியதால் அந்த வாய்ப்புகளை நிராகரித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin