அவுஸ்திரேலியாவில் கடும் வெப்பம்

அவுஸ்திரேலியாவின் மேற்குப் பகுதிகளில் நேற்றும் (23) இன்றும் (24) கடும் வெப்ப அலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பேர்த் பிராந்தியத்தில் டிசம்பர் மாதம் சராசரியாகப் பதிவாகும் வெப்பநிலையை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகும் எனவும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரலாம் எனவும் அவுஸ்‌திரேலிய தேசிய வானிலை முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

சிட்னி மற்றும் அதனை அண்மித்துள்ள வடக்கு பகுதிகளில் வெப்ப அலைகள் வீசக்கூடும் எனவும் சில பகுதிகளில் வெப்பநிலை சுமார் 45 டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் எனவும் அவுஸ்‌திரேலிய தேசிய வானிலை முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. எச்சரித்துள்ளது.

El Nino காலநிலை காரணமாக அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதிகளில் வெப்ப அலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அவுஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில், இன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் புதர்த்தீ ஏற்பட்டது எனவும் குறிப்பாக பேர்த்தில் இருந்து 320 கிலோ மீற்றர் தெற்கில் சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கும் பெம்பர்டன் நகருக்கு அருகில் இந்த புதர்த்தீ ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால்,அவுஸ்திரேலியாவின் மேற்கில் பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.

Recommended For You

About the Author: admin