நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வெற்றிப் பெற்றது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வங்கதேசம் அணி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கும் நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் விளையாடிய நியூசிலாந்து அணி 31.4 ஓவர்களில் 98 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 15.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.