ரஷ்யா ஒருபோதும் இலங்கையின் உள்விவகாரங்களை விமர்சிக்காது என்பதுடன் அதில் தலையிடாது எனவும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan தெரிவித்துள்ளார்.
இறையாண்மை உள்ள நாடாக இலங்கை தனது சுயாதீனமான வெளிநாட்டுக்கொள்கையை தொடர்ந்தும் முன்னெடுக்க கூடியதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புடினின் பிரதான ஆலோசகர் தலைமையிலான ரஷ்ய தூதுக்குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட பல உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
ரஷ்யாவின் தலையீட்டில் இலங்கையில் நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ள அணுமின் நிலையம் சிறியது எனவும் அதில் 110 மெகாவோட் மின்சாரமே உற்பத்தி செய்யப்படும் எனவும் ரஷ்ய தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.