இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் W.H.K.S.பீரிஸ் நியமனம்

இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் W.H.K.S.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவர், மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக கடமையாற்றினார்.

1969 ஜூன் ஆறாம் திகதி பிறந்த இவர் பாணந்துறை புனித அந்தோனியார் ஆண்கள் பாடசாலை மற்றும் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

1988ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட அவர், 1990ஆம் ஆண்டு இராணுவத்தின் நேர்த்தியான படையணியான கஜபா படையணியில் இரண்டாம் லெப்டினன் நிலையில் நியமிக்கப்பட்டார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலான நடத்தைக்காக ‘ரண விக்கிரம பதக்கம்’, ‘ரண சூரபதக்கம்’ மற்றும் இராணுவத்திற்கு அவர் ஆற்றிய சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில், விஷேட சேவை பதக்கம் ஆகிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin