யார் நாய்? யார் சிங்கம்? தேர்தலில் தெரிந்துவிடும்

யார் நாய்? யார் சிங்கம்? என்பது தேர்தல் காலத்தில் தெரியவரும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாடு நேற்று இடம்பெற்றிருந்தது. இதன்போது பசில் ராஜபக்ச மக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியிருந்தார்.

சாலையில் ஓடும் நாயின் மீது கல்லை எறிந்தால் நாய் குரைத்துக்கொண்டு வேகமாக ஓடும். ஆனால் சிங்கத்தின் மீது கல்லை எறிந்தால் யார் கல்லை எறிந்தார்கள் என்று பார்க்கும்.

நாமும் அப்படித்தான். எங்களை கல்லால் அடிக்காதீர்கள். நாங்கள் பிறகு பார்த்துக்கொள்வோம்” என பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்கள் இன, மத பேதமின்றி யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியும் தேசம் அல்ல. எனவே, தேர்தல் நாளில் யார் நாய்? யார் சிங்கம் என்று பார்க்கலாம்.

2001ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள ஜோதிடரிடம் மகிந்த ராஜபக்சவின் ஜாதகத்தைப் பார்க்கச் சென்றேன். இதை வேண்டுமானால் மகிந்த ராஜபக்சவிடம் கேட்கலாம்.

அவர் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, உங்கள் குடும்பத்திலிருக்கும் ராஜபக்ச ஒருவர் ஒட்டுமொத்த தலைமுறையின் நற்பெயரை அழித்துவிடுவார் என ஜோதிடர் கூறினார்.

அது கோட்டாபய ராஜபக்ச பற்றியது அல்ல. பசில் ராஜபக்ச பற்றியது” என சஜின் வாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin