இந்தியா, பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு ஏமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு அரையிறுதியில் இந்தியா- வங்கதேச அணிகள் மோதின.

இதில் இந்திய அணியை வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மோதின.

இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Recommended For You

About the Author: admin