யோகி பாபுவிற்காக களமிறங்கிய 5 நாயகர்கள்

பிரபல நடிகர் யோகி பாபு நடிப்பில், முற்றிலும் கடலில் உருவாக்கப்படவுள்ள “போட்” என்ற படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது.

பிரபல நடிகர் யோகி பாபுவை வைத்து நெய்தல் நிலத்தின் கதையை கூறும் விதமாக “போட்” (Boat) என்கின்ற திரைப்படம் உருவாகி வருகின்றது.

ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இன்று டிசம்பர் 16ம் திகதி துபாயில் இந்த படத்திற்கான டீசர் வெளியீட்டு விழா நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த படத்தின் டீசரை ஹிந்தியில் அமீர் கானும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும், மலையாளத்தில் பிரித்திவிராஜூம், தெலுங்கில் நாக சைதன்யாவும், தமிழில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்பட ஐந்து பேர் மாலை ஐந்து மணிக்கு வெளியிடுகின்றனர்.

Recommended For You

About the Author: admin