புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் திட்டம் இருந்தால் அதற்கு முன்னர் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம்.
மெட்டல் பாடி கொண்ட மொபைல்கள் உறுதியானதாக இருக்கும் என்பதால் அப்படியான தயாரிப்பை வாங்கலாம்.
HD, Full HD திரைகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவது சிறந்த அனுபவத்தை கொடுக்கும்.
செல்போன் கேம் பிரியர்கள் ஸ்னாப்ட்ராகன் ப்ராசெஸர் உள்ள மொபைல்களை வாங்க பரிந்துரைக்கப்படுகிறது.
குறைந்தபட்சம் 16GB மெமரி கொண்ட மொபைல் வாங்குவது சிறப்பானதாக இருக்கும்.
ஃபிங்கர் ப்ரிண்ட் சென்சார், கண்கள் சென்சார், கைரேகை மூலம் போனை லாக் அல்லது அன்லாக் செய்யும் போன்களை வாங்கினால் பாதுகாப்பாக இருக்கும்.