லிந்துலையில் இளம் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் தெப்பக்குளத்தில் குதித்து உயிர்மாய்த்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாயொருவரே இவ்வாறு உயிரை மாய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் சடலம் இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ஒரு வயது குழந்தைக்கு என்ன நடந்தது என்பது இன்னும் தெரியாமல் உள்ளது.
பொலிஸார் விசாரணை
குழந்தையின் சடலம் கிடைக்கப்பெறாததை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்தோடு அவர் ஐந்து பக்கத்தில் கடிதமொன்றையும் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.