நாடாளுமன்றில் அமைதியின்மை

நாடாளுமன்றின் இன்றைய அமர்வில் இருந்து ஆளும் மற்றும் எதிர்கட்சிகளைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் சபாநாயகரினால் வெளியேற்றப்பட்டனர்.

வாய்மூல விடையை எதிர்ப்பார்க்கும் கேள்வி நேரத்தில் சபையில் நளின் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோருக்கு இடையில் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டிருந்தது.

சபையில் அமைதியின்மை
சபையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமையினால் சபைக்கு தலைமைத் தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராராஜபக்ஷவினால் நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேல் ஒத்திவைக்கப்பட்டன.

இதனையடுத்து முற்பகல் 10.50 அளவில் மீண்டும் சபை அமர்வு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

Recommended For You

About the Author: webeditor