தப்போவ சரணாலயத்தில் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்போவ சரணாலயத்தில் 10ம் கட்டைப் பகுதியில் நேற்று மாலை இத் தீபரவல் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப் பகுதியில் காட்டுத்தீ பரவியுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணக்கள அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவலை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்
இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் புத்தளம் மாவட்ட அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கி உள்ளனர்.
இயதையடுத்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் இனைந்து பாரிய சிரமத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீப்பரவியமைக்கான காரணம் இதுவரைக் கண்டரியப்படவில்லை. மேலும் சம்பவம் தொடர்பில் கருவலகஸ்வெ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.