உள்ளூர் சந்தையில் முட்டைகளை 30 மற்றும் 35 ரூபாய்க்கு தட்டுப்பாடு இல்லாமல் வாங்கும்போது இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய மாதங்களில் 60 முதல் 65 ரூபாய்க்கு முட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் கணிசமான லாபம் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வாலிசுந்தர தெரிவித்துள்ளார்.
முட்டைகள் இறக்குமதி
தற்போதைய மதிப்பீட்டின்படி சுமார் 75 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் அவை லங்கா சதொச மற்றும் பல்பொருள் அங்காடி விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுகின்றன.
இதேவேளை எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்குள் உள்ளூர் முட்டையில் தன்னிறைவு அடையும் எனவும் அதன் பின்னர் உள்ளுர் முட்டை ஒன்றின் விலை 30-35 ரூபாவிற்கும் குறைவாகவே இருக்கும் எனவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.