தனிப்பட்ட தகராறினால் நபர் ஒருவர் அடித்துக் கொலை!

எலபாத-ஹல்தொல கரங்கொட பிரதேசத்தில் நபர் ஒருவர் மற்றுமொரு நபரை இரும்பினால் அடித்துக் கொன்றுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு (20.08.2023) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலையை செய்த சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை எலபாத பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: webeditor