இன்று பெரும்பாலான நபர்களை வாட்டி வதைக்கும் விஷயம் என்னவெனில், உடல் எடையே. உடல் எடை காரணமாக பல நோய்களும் தாக்குகின்றது.
கருப்பு மிளகு
மிளகு அன்றாடம் உணவுகளுக்கு பயன்படுத்தும் முக்கிய மசாலா பொருட்களில் ஒன்றாகும். சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி அவ்வப்போது மருந்தாகவும் பயன்படுகின்றது.
இதில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, வைட்டமின்-கே, நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் போன்ற பல சத்துக்கள் உள்ளன.
இதனை தேநீரிலும் பயன்படுத்தி வரும் நிலையில், எடையைக் குறைக்கவும் பயன்படுகின்றது. மேலும் மிளகு கலந்த தேநீரை பருகும் போது என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
மிளகு கலந்த தேநீரின் பயன்கள்
கருப்பு மிளகு தேநீர் பருகும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், ஆக்ஸிஜனேற்றங்கள் இதில் ஏராளமாக காணப்படுவதால், நோய்களின் பிடியிலிருந்து இது பாதுகாக்கின்றது.
செரிமானத்தினை மேம்படுத்த உதவுவதுடன், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகின்றது. தொற்றுநோயையும் எதிர்த்து போராட உதவுகின்றது.
சளி மற்றும் தொண்டை புண்களிலிருந்து விடுபட முக்கியமாக உதவுகின்றது. ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால், தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
உடல் எடை குறைக்க உதவதுடன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் செய்கின்றது. உடலில் தேங்கியுள்ள கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் பருமன் குறைக்கின்றது.
ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை அளிப்பதுடன் இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்தவும் உதவுகின்றது.