தங்கத்தில் ஜொலிக்கும் தலதா மாளிகை: புதுப்பொலிவுடன் ஒளிரும் பொன் விதானம்!

தங்கத்தில் ஜொலிக்கும் தலதா மாளிகை: புதுப்பொலிவுடன் ஒளிரும் பொன் விதானம்!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் புனரமைக்கப்பட்ட பொன் விதானத்தை ஒளிரச் செய்யும் புதிய மின்விளக்கு கட்டமைப்பு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர், தாய்லாந்தின் வாட் மார்ப் ஜான் விகாரையின் தலைமைத் தேரர் லுவாங் போர் அனன் அகஞ்சகனோ தலைமையிலான சிரேஷ்ட தாய்லாந்து பௌத்த பிக்குகள் குழுவினர் மற்றும் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

 

ஜப்பானின் இவசாகி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நவீன ‘High-Beam Eye Light’ மின்விளக்கு கட்டமைப்பு, மொசைக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புனரமைக்கப்பட்ட பொன் விதானத்தின் அழகை மேலும் மெருகூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் புதிய மின்விளக்கு கட்டமைப்பின் ஊடாக, பொன் விதானத்தின் கட்டடக்கலை அழகைத் தெளிவாக வெளிப்படுத்துவதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு மேலும் ஒரு கவர்ச்சிகரமான தோற்றத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இலங்கையின் மிகவும் புனிதமான பௌத்த வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில், கௌதம புத்த பெருமானின் புனித தந்த தாது வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin