இலங்கையின் எட்டு அரச சேவைகளில் நிலவும் 974 வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு தகுதியான இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் 2026 நவம்பர் 13ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை கல்வி நிர்வாக சேவை, நிர்வாக சேவை, விவசாய சேவை, திட்டமிடல் சேவை, கணக்காளர் சேவை, பொறியியலாளர் சேவை, கட்டடக் கலைஞர் சேவை மற்றும் விஞ்ஞான சேவை ஆகியவற்றில் இந்த ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
விண்ணப்பங்களை 2026 நவம்பர் 16ஆம் திகதி முதல் டிசம்பர் 11ஆம் திகதி காலை 9 மணி வரை இணையவழியில் சமர்ப்பிக்க முடியும்.
போட்டிப் பரீட்சை 2027 பெப்ரவரி மாதத்தில் அனைத்து மாகாணங்களின் பிரதான நகரங்களிலும் நடத்தப்படவுள்ளது.
விண்ணப்பதாரர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். ஒவ்வொரு சேவைக்குமான கல்வி மற்றும் ஏனைய தகைமைகள் தொடர்பான முழுமையான விபரங்களை வர்த்தமானி அறிவித்தலில் அறிந்துகொள்ள முடியும்

