ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவுடன் சமரசம் செய்த ஈராக் அரசு!

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவுடன் சமரசம் செய்த ஈராக் அரசு!

ஜுர்ஃப் அல்-சகார் பகுதியில் புதிய பாதுகாப்புப் படைகள் குவிப்பு!

ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான கதாயிப் ஹிஸ்புல்லாவுடன் (Kataib Hezbollah) ஈராக் அரசு சமரச உடன்பாட்டை எட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாக்தாத் நகருக்குத் தெற்கே அமைந்துள்ள ஜுர்ஃப் அல்-சகார் (Jurf al-Sakhar) பகுதி, பல ஆண்டுகளாக இந்த ஆயுதக் குழுவின் முக்கியக் கோட்டையாக இருந்து வருகிறது.

இந்தப் பகுதியில் அரசுப் படைகளை அனுப்ப ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி திட்டமிட்டதைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

புதிய ஒப்பந்தத்தின்படி, ஈராக் ராணுவம், ஃபெடரல் போலீஸ், எரிசக்தி போலீஸ் மற்றும் மக்கள் அணிதிரட்டல் படையின் (PMF) இரண்டு பிரிகேடுகள் இணைந்து செயல்படவுள்ளன.

மேலும், ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் குத்ஸ் படைப் பிரிவு தளபதி இஸ்மாயில் கானி நடத்திய பேச்சுவார்த்தைகளும் இந்தச் சமரச முயற்சியில் முக்கியப் பங்கு வகித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin