“என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?”

“என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?” – ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் காதலியிடம் திருமணக் கோரிக்கை விடுத்த எம்.பி.!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் தனது பிரியாவிடை உரையை நிகழ்த்தியபோது, எம்.பி. ஜோர்டான் லேன் தனது நீண்டகாலக் காதலியான நடாலியிடம் திருமணக் கோரிக்கை விடுத்தார்.

ரைட் தொகுதியின் உறுப்பினராகத் தனது கடைசிக் கேள்வியைக் கேட்க விரும்புவதாகக் கூறிய அவர், பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த நடாலியை நோக்கி, “என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?” என்று கேட்டார்.

இதற்கு நடாலி சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரது விரலில் திருமண மோதிரத்தை அணிவித்த ஜோர்டான் லேன், அவரை முத்தமிட்டார்.

இந்த எதிர்பாராத மகிழ்ச்சியான தருணத்தைக் கண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் பார்வையாளர்களும் கரவொலி எழுப்பி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin