பொலிஸ் சேவையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, கட்டம் கட்டமாக 20,000 பேரை புதிதாக பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால (18) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 10,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மேலும் 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

