கொழும்பில் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம் அமைக்கத் திட்டம்!

கொழும்பில் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம் அமைக்கத் திட்டம்!

இலங்கையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பில் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையமொன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

கொழும்பு விஜேராம மாவத்தையில் இந்த AI Excellence Centre அமைக்கப்படவுள்ளது.

அரசாங்க அதிகாரிகள், செயற்கை நுண்ணறிவுத் துறை நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைத்து, இலங்கையின் AI தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதே இம்மையத்தின் முக்கிய நோக்கமாகும்.

அத்துடன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பொறுப்புடனும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் இந்த மையம் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin