டிஜிட்டல் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ.10 பில்லியன் நிதி ஒதுக்கீடு!

டிஜிட்டல் தொழில்முனைவோரை ஊக்குவிக்க ரூ.10 பில்லியன் நிதி ஒதுக்கீடு!

இலங்கையில் டிஜிட்டல் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், 10 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் டிஜிட்டல் தொழில்முனைவோர் நிதியமொன்றை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

டிஜிட்டல் வணிகங்களை மேம்படுத்துவதுடன், புதிய தொழில்முனைவுகளை ஆரம்பிப்போருக்கு ஆதரவளிப்பதும் இந்த நிதியத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதேவேளை, மாணவர்களின் டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் வகையில், 2026ஆம் ஆண்டில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பிராட்பேண்ட் இணைய வவுச்சர்களை வழங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை 2027ஆம் ஆண்டிலும் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான மேலதிக நிதி ஒதுக்கீடுகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin