45 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பை உறுதிப்படுத்த புதிய திட்டம்!
எதிர்காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்த்து, நாட்டின் எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ச்சியாகப் பேணும் நோக்கில் சேமிப்புத் திறனை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்தும் அளவுக்கு எரிபொருளைக் களஞ்சியப்படுத்துவதற்கான வசதிகள் விரிவுபடுத்தப்படவுள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம் சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் விநியோகத் தடைகள் போன்ற சவால்களைச் சமாளிக்கவும், நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

