பூமியை நோக்கி விழும் நாசாவின் பிரமாண்ட தொலைநோக்கி செய்மதி!

பூமியை நோக்கி விழும் நாசாவின் பிரமாண்ட தொலைநோக்கி செய்மதி!

2004ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் ‘ஸ்விஃப்ட்’ (Swift) தொலைநோக்கி செய்மதி, செயலிழந்த நிலையில் மீண்டும் பூமியின் வளிமண்டலத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 1.5 தொன் எடையுடைய இந்தத் தொலைநோக்கி, விண்வெளியில் ஏற்படும் காமா கதிர்வீச்சு வெடிப்புகளைக் கண்டறிவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

வளிமண்டல உராய்வு மற்றும் ஈர்ப்பு விசை காரணமாக அதன் சுற்றுப்பாதை குறைந்துள்ள நிலையில், கடந்த ஒக்டோபர் 20ஆம் திகதி அதன் அறிவியல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க விண்வெளிப் படை மற்றும் நாசாவின் கண்காணிப்புகளின்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தச் செய்மதி பூமியின் வளிமண்டலத்தில் நுழையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் மீள்வருகைக்கான சாத்தியமான பகுதிகளில் தென்னிந்தியாவும் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது.

எனினும், இது குறிப்பிட்ட ஒரு நாட்டின் மீது நேரடியாக விழும் என்று அர்த்தமல்ல.

வளிமண்டலத்தில் நுழையும்போது ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக செய்மதியின் பெரும்பாலான பாகங்கள் எரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சிய சிறிய பாகங்கள் கடல் அல்லது மக்கள் நடமாட்டமற்ற பகுதிகளில் விழக்கூடும்.

மனிதர்கள் மீது அதன் பாகங்கள் விழுவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்: நாசாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, செய்மதி மீள்வருவதற்கான துல்லியமான நேரம் இன்னும் உறுதியாகவில்லை.

சமீபத்திய கண்காணிப்பு மதிப்பீடுகள் நவம்பர் 4ஆம் திகதியையும் சுட்டிக்காட்டுகின்றன. எனவே வெள்ளிக்கிழமை என உறுதியாகக் குறிப்பிடுவது சரியல்ல.

Recommended For You

About the Author: admin