பிரேசில் தேர்தல் நீதிமன்றத்தால் Meta நிறுவனத்திற்கு $1.34M அபராதம்!
பிரேசிலில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, வேட்பாளர்களின் பிரச்சார உள்ளடக்கங்களைக் கையாள்வதில்
நீதிமன்ற உத்தரவுகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தினால் Meta நிறுவனத்திற்கு அந்நாட்டின் தலைமைத் தேர்தல் நீதிமன்றம் (TSE) 7.5 மில்லியன் ரியால் (1.34 மில்லியன் டொலர்) அபராதம் விதித்துள்ளது.
அதிபர் லுயிஸ் இனாகியோ லூலா டா சில்வாவின் பிரச்சார விளம்பரங்கள் தவறாக முடக்கப்பட்டதை Meta ஏற்றுக்கொண்ட போதிலும்,
தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் வகையில் மெட்டா திட்டமிட்டுச் செயற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனத் தேர்தல் நீதிமன்ற நீதிபதி மார்கோ ஆரேலியோ உறுதிப்படுத்தியுள்ளார்.

