எரிபொருள் சேமிப்பு மையமாக மாறுகிறது திருகோணமலை துறைமுகம்!
திருகோணமலை துறைமுகத்தைப் பிராந்திய வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, திருகோணமலை துறைமுகத்தை எரிபொருள் சேமிப்பு மையமாக மேம்படுத்துவதுடன், தெற்காசியப் பிராந்தியத்தின் வலுசக்தி விநியோக வலையமைப்புடன் இணைக்கக்கூடிய மூலோபாய மையமாகவும் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் எரிபொருள் களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதுடன், பிராந்திய வலுசக்தித் துறையில் இலங்கையின் பங்களிப்பையும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
திருகோணமலை துறைமுகத்தின் புவியியல் அமைவிடத்தையும் மூலோபாய முக்கியத்துவத்தையும் பயன்படுத்தி இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

