திருகோணமலையில் விடுதி உரிமையாளர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 04ஆம் கட்டை சந்தியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், நேற்று (20) இரவு ஒரு குழுவினரால் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் திருகோணமலை, சிங்களபுர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவராவார்.
உயிரிழந்தவர் விடுதியில் தனியாக இருந்தபோது, நபர்கள் எவரோ அல்லது குழுவினரோ இணைந்து இந்தக் கொலையைச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியవந்துள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக திருகோணமலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

