மீன்பிடித்துறைக்கு ரூ.6,200 மில்லியன் நிதி ஒதுக்கீடு – 2027 பட்ஜெட்டில் அறிவிப்பு!

மீன்பிடித்துறைக்கு ரூ.6,200 மில்லியன் நிதி ஒதுக்கீடு – 2027 பட்ஜெட்டில் அறிவிப்பு!

இலங்கையின் மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்காக 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 6,200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, மீன்பிடித்தொழில் சார்ந்த பெரிய அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், 5 வீத வட்டி அடிப்படையில் 500 மில்லியன் ரூபாய் கடன் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 

அதேவேளை, மீனவர்களின் திடீர் மரணத்திற்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

 

மீன்பிடித்துறையின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், மீனவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்துவதும் இந்த நடவடிக்கைகளின் நோக்கமாகும்.

Recommended For You

About the Author: admin