பிரித்தானியாவின் ‘டைட்டானியா’ இராணுவ செய்மதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!!

பிரித்தானியாவின் ‘டைட்டானியா’ இராணுவ செய்மதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!!

பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

பிரித்தானியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘டைட்டானியா’ (Titania) இராணுவ செய்மதி வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

விண்வெளி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து, நாட்டின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முன்கூட்டியே அறிதல்: ‘டைட்டானியா’ செய்மதியானது, ‘இனாரோஸ் திட்டம்’ (Project Inaros) உடன் இணைந்து செயற்படவுள்ளது.

இதன் மூலம் சாத்தியமான அச்சுறுத்தல்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, பிரித்தானியாவை மேலும் பாதுகாப்பான நாடாக மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய உற்பத்தி: டைட்டானியா மற்றும் இனாரோஸ் ஆகிய இரண்டும் பிரித்தானியாவிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களாகும்.

பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சி: உள்நாட்டு தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, நாட்டில் உயர் திறன் கொண்ட வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதுடன், வலுவான தொழில்துறை கட்டமைப்பும், பாதுகாப்பான சூழலும் உருவாக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானிய விண்வெளி கட்டளைப் பிரிவின் (UK Space Command) கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் ஒன்றான ‘டைட்டானியா’, அதிவேக லேசர் தொடர்பாடல் மற்றும் பூமி கண்காணிப்பு தொழில்நுட்பங்களை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய ரக சோதனைச் செய்மதியாகும் (CubeSat). இது எதிர்கால இராணுவ விண்வெளி கட்டமைப்புகளுக்கு வழிகோலும் திட்டமாக முன்னெடுக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin