அமெரிக்கா இஸ்ரேலுக்கான ஆதரவைக் கைவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை! 2024லேயே கணித்தார் கமேனி?
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் திகதி, ஈரானின் இஸ்லாமியப் புரட்சியின் நிறுவனர் அயத்துல்லா ரூஹொல்லா கொமேனியின் 35ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் உரையாற்றிய ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவு தொடர்பில் முக்கிய கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
காசா மீதான இஸ்ரேலின் போர் மற்றும் அதற்கு எதிராக உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அதிகரித்து வந்த போராட்டங்கள், சர்வதேச விமர்சனங்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், உலக நாடுகளின் கருத்தொற்றுமைக்கு முன்னால் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், இஸ்ரேலுக்கான தனது ஆதரவை அமெரிக்கா ஒரு கட்டத்தில் கைவிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும், அந்தக் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் கமேனி தனது உரையில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், பாலஸ்தீன விவகாரம் உலகின் முதன்மையான பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
2024ஆம் ஆண்டு கமேனி வெளியிட்ட இந்தக் கருத்துகள் தற்போது மீண்டும் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளன.

