பதுளை மாவட்டத்திற்கு 1,250 தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகம்!
இலங்கையில் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘கப்துரு சவிய’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்திற்கு 1,250 தென்னங்கன்றுகள் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தென்னைப் பயிர்ச்செய்கை சபையினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் கீழ் நாடளாவிய ரீதியில் 5 இலட்சம் தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக, பதுளை மாவட்டத்திற்கான தென்னங்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வு நாளை (07) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துவதுடன், தென்னை உற்பத்தியையும் அதிகரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

