வகுப்பு தோழனை கேலி செய்த மாணவர்களுக்கு விபரீதம்

வகுப்பு தோழனை கேலி செய்த மாணவர்களுக்கு விபரீதம் – “தெருவில் இறங்க முடியவில்லை” என மன்னிப்பு கேட்ட மாணவி!

சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!

தங்கள் வகுப்பைச் சேர்ந்த மாணவன் ஒருவனை “அசிங்கமாக இருக்கிறாய்” என கேலி செய்து சண்டித்தனம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் குழு ஒன்று தற்போது கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்த சம்பவம் வைரலானதை அடுத்து, பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “இவர்களைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது, தெருவில் நடமாட முடியாத நிலை” என சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவாகி வருகின்றன.

இந்நிலையில், இதில் தொடர்புடைய மாணவி ஒருவர் Venuri Nishadi என்ற பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கோரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“எங்களை மன்னித்துவிடுங்கள்… இது இவ்வளவு தூரம் போகும் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் இப்போது நேரம் முடிந்துவிட்டது.

தெருவில் இறங்கி நடக்க முடியாத நிலைதான் இப்போது உள்ளது. வீட்டில் இருந்து திட்டுகிறார்கள். இன்று எங்களுக்கு வீட்டில் இருந்து சாப்பாடு கூட கொடுக்கவில்லை. நான் அனுராதபுரத்தில் இருக்கிறேன், அனுராதபுரத்தில் இருந்து பஸ்ஸில் 30 கி.மீ செல்ல வேண்டும். இப்போது பஸ்ஸில் செல்லவே பயமாக இருக்கிறது. இன்று வீட்டுக்கு போக இருந்தும் போகவில்லை.

உறவினர்கள் வீட்டுக்கு வந்து அம்மாவை திட்டுகிறார்களாம். தயவுசெய்து இனி எங்களை திட்டாதீர்கள், போதும். நாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அந்த பையனை அசிங்கமாக இருக்கிறாய் என்று சொன்னதும் தவறு தான்.

எனக்கு இப்போது சரியாக தூக்கம் கூட வரவில்லை.”

இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு கேலி, பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே சாட்சி என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin