என்னை பதவி நீக்க முயன்றால் அழித்துவிடுவேன்! ட்ரம்ப் ஆவேச எச்சரிக்கை 

என்னை பதவி நீக்க முயன்றால் அழித்துவிடுவேன்! ட்ரம்ப் ஆவேச எச்சரிக்கை

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது.

இதனையடுத்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாடு ஜனநாயகக் கட்சியிடம் செல்லவுள்ளது.

இந்நிலையில், ஜனநாயகக் கட்சியினர் தன்னைப் பதவி நீக்கம் (Impeachment) செய்ய முயற்சித்தால், அக்கட்சியே அரசியல் ரீதியாக அழிந்துவிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், தன்னைப் பதவி நீக்கம் செய்வது குறித்து தமக்குச் சிறிதளவும் கவலையில்லை என்றும், காரணமின்றி முன்னெடுக்கப்படும் இத்தகைய நடவடிக்கை ஜனநாயகக் கட்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து ட்ரம்ப் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Recommended For You

About the Author: admin