ரகித்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள், சொகுசு வாகனங்கள் 3 மாதங்களுக்கு முடக்கம்!

ரகித்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள், சொகுசு வாகனங்கள் 3 மாதங்களுக்கு முடக்கம்!

முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் சட்டத்தரணி ரகித்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான நான்கு வங்கிக் கணக்குகள் மற்றும் இரண்டு சொகுசு வாகனங்களை மூன்று மாதங்களுக்கு முடக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வங்கிக் கணக்குகளில் சுமார் 4 கோடி ரூபாய் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டாவை விடுவிப்பதற்கு உதவுவதாகக் கூறி, அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாக ரகித்த ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான சொத்துக்கள் குறித்த விசாரணையை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னெடுத்து வருகிறது.

Recommended For You

About the Author: admin