அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வெற்றிக்கு கமலா ஹாரிஸ் பாராட்டு

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வெற்றிக்கு கமலா ஹாரிஸ் பாராட்டு

அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், நேற்று (05) வெளியிட்ட விசேட அறிக்கையில், 2026ஆம் ஆண்டு இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெற்ற வெற்றியைப் பாராட்டியுள்ளார்.

அத்துடன், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்களது பெரும்பான்மை அதிகாரத்தைத் தயக்கமின்றிப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் தினத்தில் அமெரிக்க மக்கள் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்திலும் அதற்கு ஆதரவளிக்கும் குடியரசுக் கட்சித் தலைவர்களிடமும் காணப்படும் ஊழல், திறமையின்மை மற்றும் அலட்சியப் போக்கை இனியும் பொறுத்துக்கொள்ள மக்கள் தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்காக நாடு முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, மக்களின் அதிருப்தி செயற்பாடாக மாறியதைத் தாம் நேரில் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வெற்றிக்காக உழைத்த வேட்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களுக்கும் அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

உண்மையான பணிகள் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளன எனக் குறிப்பிட்ட கமலா ஹாரிஸ், உழைக்கும் குடும்பங்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவதற்கும், தற்போதைய நிர்வாகத்தின் ஊழல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்களிடம் உள்ள அனைத்து அதிகாரங்களையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Recommended For You

About the Author: admin