பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி விபத்து!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி விபத்து!

ஆரம்ப பாடசாலை மாணவர்கள் குழுவை ஏற்றிச் சென்ற ஒரு முச்சக்கரவண்டி வாகனம் 10 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த நான்கு பாடசாலை மாணவர்கள் காயமடைந்து, டிக்கோயா ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த விபத்து இன்று (04) பிற்பகல், ஹட்டன் – புலியாவத்த பிரதான வீதியில் உள்ள பி.டபிள்யூ. பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

 

புலியாவத்த பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை முடித்து வந்த நான்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற தனது முச்சக்கரவண்டி எதிர் திசையிலிருந்து அதிவேகமாக வந்த ஒரு முச்சக்கர வாகனத்திக்கு இடமளிக்க முயன்றபோது, தனது வாகனம் கவிழ்ந்து செங்குத்தான பள்ளத்தில் விழுந்ததாக சாரதி தெரிவித்தார்.

 

இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நோர்வூட் பொலிஸார் புலியயாவத்த தமிழ் ஆரம்ப பாடசாலை ஒன்றில் 3 முதல் 4 ஆம் வகுப்புகளில் பயிலும் மூன்று மாணவிகளும் ஒரு மாணவனும் இந்த விபத்தில் காயமடைந்ததாகத் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin