கத்தாரில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை – அரசர் ஷேக் தமீம் பங்கேற்பு!

கத்தாரில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை – அரசர் ஷேக் தமீம் பங்கேற்பு!

கத்தாரில் மழை வேண்டி நடத்தப்பட்ட ஸலாத்துல் இஸ்திஸ்கா சிறப்புத் தொழுகையில், அரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இன்று வியாழக்கிழமை(05) பங்கேற்றார்.

லுசைல் தொழுகை மைதானத்தில் நடைபெற்ற இத்தொழுகையில் பல முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், ஷூரா சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்ற பிரசங்கத்தில், மக்கள் இறைவனிடம் பணிவுடன் பாவமன்னிப்புக் கோரவும், தர்மங்களை அதிகரிக்கவும், நற்செயல்களில் ஈடுபடவும் ஷேக் டாக்டர் யஹ்யா பட்டி அல் நுஐமி வலியுறுத்தினார்.

மழை பொழிவதில் ஏற்படும் தாமதம் இறைவனின் அருளை நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin