ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் கத்தார் கப்பல்களுக்கு கட்டணம் இல்லை – ஈரான் அறிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் கத்தார் கப்பல்களுக்கு கட்டணம் இல்லை – ஈரான் அறிவிப்பு!

துருக்கியின் செய்தி நிறுவனமான அனடோலு ஏஜென்சியின் தகவலின்படி, ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் கத்தார் கப்பல்களுக்கு எவ்வித போக்குவரத்துக் கட்டணமும் அறவிடப்படாது என ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவரான அமீர் ஹயாத் மொகத்தம் (Amir Hayat Moqaddam), ஈரானிய மாணவர் செய்தி நிறுவனமான (ISNA) இற்கு வழங்கிய கருத்தில், கத்தார், இந்தியா, சீனா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் கப்பல்கள் தற்போது ஹோர்முஸ் நீரிணை ஊடான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

இதன்படி, கத்தார் கப்பல்கள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து செல்ல அனுமதிக்கப்படுவதாகவும், அதேவேளை இந்தியா மற்றும் சீனக் கப்பல்களிடமிருந்து போக்குவரத்துக் கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

எனினும், ஈராக் கப்பல்களுக்குக் கட்டணம் அறவிடப்படுகிறதா என்பது குறித்து அவர் எவ்வித விளக்கத்தையும் வழங்கவில்லை.

 

ஈரானுக்கும் குறித்த நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன்களின் அடிப்படையிலேயே இந்த விலக்குகள் வழங்கப்பட்டுள்ளதாக அமீர் ஹயாத் மொகத்தம் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin